Thursday, May 31, 2012

Aishwarya dhanush, felicitated, ஐஸ்வர்யா தனுஷ், பாராட்டு, 3 படம் தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த ஐஸ்வர்யா தனுஷூக்கு, நியூயார்க் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்குநராக அவதரித்த படம் 3. இப்படம்

3 படம் தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த ஐஸ்வர்யா தனுஷூக்கு, நியூயார்க் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்குநராக அவதரித்த படம் 3. இப்படம் அமெரிக்காவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஐஸ்வர்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்தார். திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யாவுக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன, அப்படியே 3 படமும் திரையிடப்பட்டது.  

பின்னர் நியூயார்க் தமிழ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவிலும் பங்கேற்றார் ஐஸ்வர்யா. அதிலும் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள் ஏராளமான குவிந்தன. பின்னர் தமிழ் சங்கத்தின் சார்பில் ஐஸ்வர்யாவுக்கு நினைவு பரிசு ஒன்று வழங்கப்பட்டது. இதனை சங்க தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி வழங்கினார்.

No comments:

Post a Comment