Saturday, May 26, 2012

அமெரிக்காவின் வார இதழான டைம்மில் டாப்-10 படங்களில் பாலிவுட்டின் சூப்பர் ஹிட் படமான தேவதாஸ் படம் 8வது இடத்தை பிடி Devdas, Time magazine, 10 greatest, movies list, டைம், வார இதழின், டாப்-10ல், தேவதாஸ், டைம் வார இதழின் டாப்-10ல் தேவதாஸ்!




அமெரிக்காவின் வார இதழான டைம்மில் டாப்-10 படங்களில் பாலிவுட்டின் சூப்பர் ஹிட் படமான தேவதாஸ் படம் 8வது இடத்தை பிடித்து இருக்கிறது. ஷாரூக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், கடந்த 2002ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் தேவதாஸ். பாலிவுட்டில் சூப்பர்-டூப்பர் ஹிட்டான இப்படத்திற்கு மற்றொரு கவுரம் சேர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் வார இதழான டைம், உலகளவில் சிறந்த டாப்-10 படங்களுக்கான பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் தேவதாஸ் படம் 8வது இடத்தை பெற்று இருக்கிறது. முதல் இடத்தில் வால்.இ என்ற படமும், 2வது இடத்தில் தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் படமும், 3வது இடத்தில் அவதார் படமும் இடம் பெற்று இருக்கிறது. சமீபத்தில் 5 ஆஸ்கர் விருதுகளை குவித்த தி ஆர்ட்டிஸ்ட் படம் 10 வது இடத்தை பிடித்து இருக்கிறது.

டைம் வெளியிட்டுள்ள டாப்-10 படங்களின் பட்டியல் : 

01. வால்-இ (2008)

02. தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் (2001-03)

03. அவதார் (2009)

04. கிரவுக்சிங் டைகர், ஹிடன் டிராகன் (2000)

05. தி ஒயிட் ரிப்பன் (2009)

06. தி ஹர்ட் லாக்கர் (2009)

07. சினக்டோக் நியூயார்க் (2008)

08. தேவதாஸ் (2002)

09. மவுலின் ரவுக் (2001)

10. தி ஆர்ட்டிஸ்ட் (2011)

No comments:

Post a Comment