Tuesday, June 12, 2012

Karthi, saguni, got, U certificate, கார்த்தி, சகுனி, யு சான்று, கார்த்தியின் சகுனி படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. புதுமுகம் சங்கர் தயாளன் இயக்கத்தில், கார்த்தி, ப்ரனீதா, சந்தானம் ஆகி‌யோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சகுனி. கொஞ்சம் அரசியல் பின்னணியில் உருவாகி




கார்த்தியின் சகுனி படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. புதுமுகம் சங்கர் தயாளன் இயக்கத்தில், கார்த்தி, ப்ரனீதா, சந்தானம் ஆகி‌யோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சகுனி. கொஞ்சம் அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம், ரசிகர்கள் முழுக்க முழுக்க வயிறு குலுங்கி சிரிக்கும் படமாக உருவாகி இருக்கிறது. தமிழ் புத்தாண்டுக்கே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் பெப்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தாமதமாகியது. தற்போது ஷூட்டிங் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. முன்னதாக இப்படத்தை சென்சொர் போர்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர் சகுனி குழுவினர். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் சகுனிக்கு யு சான்று கொடுத்துள்ளனர். வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் இப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது. சகுனி படத்தோடு அஜித்தின் பில்லா-2 படமும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment