புதுக்கோட்டையில் பிறந்து, 17வயதில் டி.ஆர். ரசிகராக இருந்து, அவரின் திறமை கண்டு வியந்து, சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தவர் தம்பி ராமையா. ஒரு இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியராக தன்னை முன் நிறுத்த விரும்பியவர், சிலமாறுபட்ட சூழ்நிலையால் இயக்குநரானார். தொடர்ந்து சில சரிவுகளை சமாளித்து பின்னர் நடிகரானார். மைனா படம் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இப்போது நெடுஞ்சாலை படத்தில் சத்யா இசையில், அவரே பாடல் எழுதி, பாடி, நடித்தும் இருக்கிறார். கிருஷ்ணா தியேட்டர், மன்னாரு போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். இருந்தும் இயக்குநர் ஆசை அவரை விடவே இல்லை. இப்போது ஒரு கூடை முத்தம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
என்னதான் படங்களில் நடித்து சம்பாதித்தாலும் இன்னும் சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்ற கவலை தம்பி ராமையாவுக்கு இருக்கிறது. சமீபத்தில் தான் லோன் போட்டு கார் வாங்கினாராம். ஏன்? என்று கேட்டால் தேவைக்கு அதிகமான பணமும், புகழும் ஒருவனது நிம்மதியை கெடுத்துவிடும். எனக்கு எது தேவையோ அது இருக்கிறது, அதுபோதும் என்கிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த "கழுகு" படம் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுதவிர கும்கி, சாட்டை, பேச்சியக்கா மருமகன், மதில் மேல் பூனை, தாண்டவம் என்று ஒரு பெரிய லிஸ்ட்டை கையில் வைத்திருக்கிறார் தம்பி ராமையா.
No comments:
Post a Comment