ஆடுகளத்துக்குப்பிறகு தனுஷ் நடித்த மயக்கம் என்ன, 3 ஆகிய படங்கள் தோல்வி
அடைந்ததால், பலத்த அதிர்ச்சியில் இருந்தார் மனிதர். அந்த நேரம்
பார்த்துதான் ஒரு சேஞ்சுக்காக வேற்று மொழிப்படங்களில் நடிக்கலாமே என்று
ராஞ்சனா படம் மூலம் இந்தியில் பிரவேசித்தார். அப்படம் ஒரே கல்லில் இரண்டு
மாங்காயாட்டம் தமிழிலும் உருவானதால் தனுசுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இதற்கிடையே,
இந்தியில் முதல் படமாக இருந்தபோதும், துணிச்சலாக டப்பிங்கும் பேசினார்.
இதையடுத்து அப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சோனம்கபூரின் தந்தை
அனில்கபூர் தனுஷின் நடிப்பு குறித்து மும்பை மீடியாக்களில் பெருமையாக
பேட்டி கொடுத்தார். முதல் படத்திலேயே பெரிய நடிகரின் பாராட்டு
கிடைத்ததால், அடுத்து இந்தி சினிமாவையும் ஒரு கலக்கு கலக்குவோம் என்ற
முடிவுக்கு வந்து விட்டார் தனுஷ்.
இப்படி அவர் நடித்த ராஞ்சனா
இப்போது தமிழிலும் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகிறது. அதோடு, தமிழில்
நடித்த மரியான் படமும் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. ஆக, ஒரே
நேரத்தில் தனது நடிப்பில் ராஞ்சனா, அம்பிகாபதி, மரியான் என மூன்று படங்கள்
ரசிகர்களின் பார்வைக்கு வரப்போவதால் சொல்ல முடியாத சந்தோஷத்தில்
இருக்கிறார் தனுஷ். அதோடு, மூன்று படங்களுமே வெற்றி பெற்று தன்னை அடுத்த
கட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கடவுளை
வேண்டிக்கொண்டிருக்கிறாராம் அவர்.
No comments:
Post a Comment